செக்கில் எண்ணெய் எடுப்பது எங்கள் குலத்தொழில் ஆகும்.
1950 வருட காலத்தில் எனது தந்தையார் பாரம்பரியமாக மாடுகளை பூட்டி கல்செக்கு தொழிலை செய்து வந்தார். பின்னர் 1968 காலங்களில் எங்கள் பகுதியில் இருந்த செக்கு ஆட்டுவோர் சங்கத்தில் இணைந்து குல தொழிலாக செய்து வந்தோம்.
நாளடைவில் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி காரணமாக மாடுகளை வைத்து கல்செக்கு ஆட்டுவது குறைந்து விருப்பத்திற்கு ஏற்ப மாற்று தொழிலுக்கு செல்லப்பட்டது.
மீண்டும் 1994 வருட காலத்தில் அரசு உதவியுடன் மின் மோட்டரை வைத்து செக்கு தொழிலை செய்தோம். பொருளாதார சூழ்நிலையில் மீண்டும் எங்களால் தொடந்து செய்ய இயலவில்லை.
பணி ஒய்வு பெற்ற பிறகு மீண்டும் புத்துணர்ச்சியோடு 2014 முதல் தரமான மூலப்பொருட்களை வைத்து மரச்செக்கு தொழிலை ஆரம்பித்து இன்று வரை நல்ல முறையில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்போடு செய்து வருகிறோம்.